Publish Date: Mon, 29 Jun 2020 (08:47 IST)
Updated Date: Mon, 29 Jun 2020 (08:50 IST)
ரஷ்யாவில் இருக்கும் அணு உலை ஒன்றிலிருந்து ஐரோப்பா ஸ்கேண்டினேவியன் நாடுகளுக்கு அணு கதிர் வீச்சு பரவுகிறது என்ற குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
பின்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடனில் உள்ள அணு பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள் வழக்கத்தைவிட அதிகமான கதிரியக்கம் வளிமண்டலத்தில் பரவி உள்ளதாக கூறியது. இந்த கதிரியக்கமானது மேற்கு ரஷ்யாவிலிருந்து வந்ததாக டச்சு சுகாதார அமைப்பு கூறியது.
ஏதேனும் அணு உலையில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியது. ஆனால், இதனை ரஷ்யா மறுத்துள்ளது. மேற்கு ரஷ்யாவில் உள்ள இரண்டு அணு உலைகளும் வழக்கம் போல இயங்குவதாக, சிறு கசிவு கூட அங்கு ஏற்படவில்லை என அந்நாடு கூறி உள்ளது.