Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே - ஆபாசப் பட நடிகை கோபம்!

Advertiesment
இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே - ஆபாசப் பட நடிகை கோபம்!
, சனி, 20 ஜூன் 2020 (08:09 IST)
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகையும் கார் ரேஸ் வீராங்கனையுமான ரினி கிரேஸ் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தும் இந்தியர்கள் மே வழக்குத் தொடர இருப்பதாக அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகம் முழுக்க உள்ள பலதரப்பு மக்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், வருமான ரீதியாகவும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் பெரிய பணக்காரர்கள் முதல் ஏழை எளிய மக்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருவதால் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்றே கணிக்கமுடியாமல் அனைவரும் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முழு நேர கார் ரேஸரான ரெனீ கிரேசி ( 25 ) கார் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கினால் வருமானமின்றி தவித்த அவர்  திடீரென ஆபாச நட்சத்திரமாக உருவெடுத்தார்.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . ஏன்? எதற்காக என்று குழம்பிப்போன அனைவருக்கும் விளக்கமளித்துள்ள ரெனீ கிரேசி, " நான் இந்த துறையில் நுழைந்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள்  நிறைய பணத்தை சம்பாதித்து விட்டேன். இந்த இரண்டு மாத முடிவில் நான் சம்பாதித்த பணம் ஆறு இலக்கங்களை தொட்டுவிடும். இந்தத் தொழில் மூலம் எனக்கு பணம் கிடைப்பது எனக்கு பிடித்திருக்கிறது... மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் பணம் எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது.’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இப்போது அவர் இந்தியர்கள் தன் புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் தன் பெயரில் போலி சமூகவலைதளங்களில் போலியான கணக்குகள் தொடங்குவதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். மேலும் தனது வலைதளத்தில் ‘இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே... உன்னை வரவேற்கவில்லை’ என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுஷாந்த்சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: டைட்டில் என்ன தெரியுமா?