எந்த பிரச்சினையையும் போராடி வெல்வார். ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் நிச்சயம் வெற்றி கிட்டும் என்ற எண்ணம் கொண்டவர். நேர்மறை சிந்தனையாளர். யாரேனும் அவமரியாதையாக பேசிவிட்டால் அவர்களை அசுரனைப் போல பாவிப்பார். யாரையும் உதாசீனப்படுத்த மாட்டார். கடின உழைப்பாளி. காரியத்தை முடிக்காமல் உறங்க மாட்டார். நண்பர்களை அதிகம் விரும்புபவர். யாரையும் எளிதில் நம்புபவர். எதையும் முடிவு செய்துவிட்டால் முடிக்காமல் விட மாட்டார்கள். எளிதில் மகிழ்ச்சி அடைபவர்களாகவும், துக்கம் கொள்பவர்களாகவும் இருப்பர். இவர்களை சுற்றி உள்ளவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்திருப்பர். எதையும் செய்வதற்கு முன் யோசித்து முடிவெடுப்பார். இவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருப்பார். ஆனால் எதிரிகளால் இவர்களை ஒன்றும் செய்ய இயலாது. நல்ல ஆசானாக இருப்பார். எதையும் எளிதில் கற்றுக் கொள்வார். படைப்புகளில் அதிக ஆர்வம் கொண்டவர்.