மீனம்-பண்பியல் தொகுப்பு
மீன ராசிக் காரர்கள் நல்ல மனப் பக்குவத்தை உடையவர்கள். இந்த ராசிக் காரர்கள் யாரை நண்பனாக்கி கொள்கின்றனரோ அவர்கள் மிகவும் பாக்கியசாலி இவர்களின் நற்குணம் மிகுந்தவர். இவர்களுக்கு சங்கடங்கள் நேரும் சமயத்தில் புஷ்பராகம் கோமேகதம் அல்லது முத்தை மோதிரமாக அணிந்து கொள்ளுதல் அல்லது பக்கத்தில் வைத்துக் கொண்டாலும் துன்பம் விலகும். திங்கள் மற்றும் வியாழக் கிழமையில் சத்திய நாராயணனை பூஜை செய்தல் வேண்டும். அல்லது 16 திங்கட்கிழமை விரதம் இருத்தல் வேண்டும். காயத்ரி மந்திரம் படித்தல் வேண்டும். வியாழக் கிழமையில் விரதம் இரந்தால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கண்ணாடி, பருப்பு, பொருட்கள், நெய், நீலநிற துணி, புத்தகம், நீலநிறப் பூ, பழம் முதலியவற்றை தானம் செய்தல் வேண்டும். "ஓம் ஹங் ஹி ஹெளசா ப்ருஹாஸ்பதே நமஹ" என்ற மந்திரத்தை 19000 முறை உச்சரிக்க வேண்டும்.
Show comments