
சிம்மம்-இல்லற வாழ்க்கை
சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களிடம் அன்பு காட்டுவர். இவர்கள் சிறந்த கணவராக இருப்பார். இவர்களது மண வாழ்க்கை சிறப்பாக அமைந்தாலும், அடிக்கடி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும். திருமண தோஷம் இருக்க வாய்ப்புண்டு. சிம்ம ராசிக்காரர்கள் பழகுவதற்கு கடினமானவர்கள். எளிதில் கோபம் வந்துவிடும். கோபம் வந்தால் எந்த எல்லைக்கும் செல்வார்கள். பிரியமானவர்களிடம் அதிகம் கோபப்படுவர். கோபத்தை குறைத்தால் மண வாழ்க்கை சிறப்பாக அமையும்