Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்ப கடன்கள் தீரும்! - இன்றைய ராசி பலன்கள் (26.02.2025)!

Prasanth Karthick
புதன், 26 பிப்ரவரி 2025 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்:
இன்று பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர். பிள்ளைகளுக்காகப் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அரசல் புரசலாக தங்களை கேலி பேசியவர்கள் கூட தங்களது தவறான போக்கை மாற்றிக் கொள்வர். பாகப் பிரிவினை விஷய பஞ்சாயத்துகள் பைசல் ஆகும். பிதுரார்ஜித சொத்துக்கள் சிலருக்கு அமையும். உங்களது நேர்மையான முன்னேற்றம் எந்த தடங்கல்கள் வந்தாலும் சாதிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9   

ரிஷபம்:
இன்று வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் ஏற்படும். கையிருப்புகள் கரையும். கடன் வாங்க நேரிடும். வாழ்க்கைத்துணையின் சின்ன சின்ன கோபங்களையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சக ஊழியர்களை விமர்சித்துப் பேசவேண்டாம். வேலைபளு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

மிதுனம்: 
இன்று வீண் அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். ஆனால், அதற்கேற்ற பலனும் இருக்கும். திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. இருந்தாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கத்தான் செய்யும்.  சில விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் அறிவு பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்:
இன்று எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே தொடரப்போகும் காலமிது. நல்லது. எந்த இடத்திற்கு சென்றாலும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்ததல்லவா இனி அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

சிம்மம்:
இன்று திறமைகள் வெளிப்படும். தான தருமங்களில் விருப்பம் உண்டாகும். உறவினர்களின் அர்த்தமற்ற எதிர்ப்புகளால் பட்ட கஷ்டங்கள் நீங்கும். அளவுக்கதிகமாக உள்ள குடும்பக் கடன்கள் தீரும். நீங்கள் விரும்பியபடி வாழ்க்கைத்துணை அமையும். ஸ்திர சொத்துக்களை வாங்குவதிலும் விற்பதிலும் பிரச்சனைகள் வரக்கூடும். சகோதரர்களுடன் விவாதம் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கன்னி:
இன்று வழக்குகள் வெற்றியை தரும். புதிய வீடு கட்டும் முயற்சி நிறைவேறும். வாகனம் வாங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதால் வியாபாரிகளின் லாபம் பெருகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

துலாம்:
இன்று பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அதிகமான தர்ம விஷயங்களில் ஈடுபடுவீர்கள். அதிகாரப் பதவிகள் கிட்டும். வழக்குகளில் நல்ல வெற்றியை எதிர்பார்ப்பதுடன் எதிரிகள் வீழ்ச்சியையும் காணலாம். பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

விருச்சிகம்:
இன்று உணவு விஷயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. கடுமையான பண நெருக்கடி ஏற்படலாம். செயல்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது குடும்ப மானத்தை காப்பாற்றும். பெற்றோர்கள் கண்டிப்பாக பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்குதல் வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

தனுசு:
இன்று ஆச்சரியமான ஒரு கலகத்தால் நீங்கள் மானப் பிரச்னைகளில் மாட்டிக்கொள்ள நேரிடும். ஓர் இடத்தில் கட்டுண்டு கிடக்கும்படியாக ஆகும். மிகுந்த கவனம் தேவை. கூட்டுத் தொழில் புரிவோர் கணக்கு வழக்குகளை பரஸ்பரம் சரிபார்த்து நேர் செய்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

 
மகரம்:
இன்று சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே  முடிவு செய்யவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

 
கும்பம்:
இன்று பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

 
மீனம்:
இன்று குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். குழந்தை பாக்கியம் கிட்டும். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியம். பொதுவாக நினைத்த காரியங்களை அதன்  கஷ்டங்களுடன் எளிமையாக எதிர்கொள்வதும்  வீண் செலவுகளை குறைப்பதும் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதிருப்பதும் நன்மையைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments