உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வந்ததும் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டு தொடங்கிய போர், மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போர் நிறுத்தம் ஏற்பட்டால் உடனடியாக தேர்தலை நடத்த ஏற்பாடு செய்வேன் என்றும், அதன் பிறகு அதிபர் பதவியில் இருந்து விலகுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
"என் நாட்டுக்கு உதவ வேண்டும் என்பதுதான் நான் மிகவும் விரும்பியது. போர் முடிவுக்கு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு," என்று அவர் கூறியுள்ளார்.