Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்பிரிக்க நாடுகளில் 100 போர் கிணறுகள் அமைத்து உதவிய யூடியூபர் Mr.Beast

Mister beast
, செவ்வாய், 7 நவம்பர் 2023 (15:26 IST)
பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் எனப்படும் ஜிம்மி டோனல்ட்சன் ஆப்பிரிக்க நாடுகளில் 100 போர் கிணறுகள் அமைத்து உதவியுள்ளார். அவர்து செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

யூடியூப் என்ற வலைதளத்தின் மூலம் பலரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, அதன் மூலம் சம்பாதித்து வருகின்றனர். இந்த நிலையில், யூடியூப் தளத்தில் அதிக சப்கிரைபர்களைக் கொண்ட  பிரபல யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் எனப்படும் ஜிம்மி டோனல்ட்சன் பிரபல டைம்ஸ் இதழின் உலகின் அதிக செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

அவரது ஒவ்வொரு வீடியோவும் ஒரு நாளில் பல கோடி பார்வையாளர்களையும் பல மில்லியன் கணக்கில் லைக்குகளும், லட்சத்திற்கும் அதிகமான கமெண்டுகளும், பெறும் நிலையில் அவரது யூடியூப்பில் 20.7 கோடி சப்கிரைபர்ஸ் உள்ளனர்.

இந்த நிலையில், ஆப்பிரிக்காவில் 100 போர் கிணறுகள் அமைத்து உதவியுள்ளார் மிஸ்டர் பீஸ்ட். இதற்கு முன்பு பார்வை மாற்றுத்திறனாளிகள்100 பேரிஉக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை, கால்கள் இழந்த 2000 பேருக்கு செயற்கை கால்கள் உள்ளிட்ட உதவிகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேக் வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை....மத்திய அரசு எச்சரிக்கை