Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்படி என்ன வன்மமோ.. மூதாட்டி கெட்டப்பில் வந்த இளைஞன்! – சேதமான புகழ்மிக்க ஓவியம்!

Webdunia
திங்கள், 30 மே 2022 (12:44 IST)
பாரிஸில் உள்ள புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை மூதாட்டி போல வந்து இளைஞர் ஒருவர் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் வாழ்ந்த உலக புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவர் லியானார்டோ டாவின்சி. இவரது மோனலிசா ஓவியம் உலக புகழ்பெற்றது. இந்த ஓவியம் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மியூசியத்திற்கு மூதாட்டி போல கெட்டப்பில் வீல் சேரில் சென்ற நபர் திடீரென துள்ளி குதித்து சென்று கேக் க்ரீமை மோனலிசா ஓவியத்தின் மீது பூசியது, அங்கிருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக அருங்காட்சியக காவலர்கள் அந்த இளைஞரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மோனலிசா ஓவியத்திற்கு குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் ஓவியம் சேதமாகவில்லை என்றும் க்ரிம் கண்ணாடி மேலேயே ஒட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments