Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்: தடைகளை அகற்ற இரான் நிபந்தனை

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்: தடைகளை அகற்ற இரான் நிபந்தனை
, வெள்ளி, 12 நவம்பர் 2021 (15:19 IST)
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் சேர வேண்டுமானால் எங்கள் மீதான தடைகளை அகற்றுங்கள் என இரான் நிபந்தனை. 

 
தங்கள் நாட்டின் மீதான தடைகளை அகற்றினால்தான் தங்களால் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் சேர முடியும் என்று இரான் நாட்டின் மூத்த தலைவர் அலி சாலாஜெகா பிபிசியிடம் கூறினார். இரான் மீதான தடைகள், புதுப்பிக்கவல்ல எரிசக்தி போன்ற துறைகளில் நாட்டை முடக்குவதாக அவர் தெரிவித்தார்.
 
உலகில் கார்பனை அதிகம் வெளியிடும் நாடுகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது இரான். ஆனால், அது 2015ம் ஆண்டின் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இன்னும் சேராத சில நாடுகளில் இரானும் ஒன்று.
 
புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறையில் வெளிநாட்டு முதலீடுகள் சரிந்துவிட்டதால், சமீப ஆண்டுகளில் அந்நாட்டில் கார்பன் உமிழ்வு அளவு அதிகரித்துவிட்டது. தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையை ஒட்டி நடந்த மக்கள் போராட்டங்களை அந்நாடு கடுமையாக வன்முறையைப் பயன்படுத்தி ஒடுக்கிவிட்டது.
 
கிளாஸ்கோ பருவநிலை உச்சிமாநாட்டுக்கு அந்நாட்டின் அதிபர் எப்ராஹிம் ரயீசி நேரில் வரவில்லை. ஆனால், இரான் சார்பாக மாநாட்டுக்கு வந்திருக்கும் குழு தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் கோருகிறது.
 
"உலகின் வேறு எந்தப் பகுதியையும் போலவே இரானும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது," என்கிறார் சாலாஜெகா. "பருவநிலை மாற்றம் வருடாந்திர மழைப் பொழிவை குறைத்துள்ளது. எங்கள் ஆறுகளுக்கு வரும் நீரின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால், எங்கள் விவசாயம், எங்கள் தொழில்துறை, குடிநீர்த் தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன," என்கிறார் அவர்.
 
ஆனால், 10 லட்சத்துக்கு மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டியும், 700க்கு மேற்பட்ட அணைகளைக் கட்டியும் தங்கள் தண்ணீர் ஆதாரங்களை தாங்களே நாசம் செய்துகொண்டதாக இரான் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
 
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் பற்றிக் கூறும் சாலாஜெகா, அது இருவழிப் பாதையாக இருக்கவேண்டும் என்கிறார். "ஒடுக்குமுறை தன்மையுள்ள தடைகள் அமலில் உள்ள நிலையில், எந்தவிதமான இறக்குமதியும் செய்ய முடிவதில்லை. அடிப்படை மனித உரிமையான மருந்துகளைக்கூட இறக்குமதி செய்ய முடியவில்லை," என்கிறார் அவர்.
 
"தடைகள் நீக்கப்பட்டால் சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் கடமைப்பட்டவர்கள். அந்த சூழ்நிலையில் சர்வதேச சமூகம் எங்களுக்கு புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் நவீன தொழில்நுட்பத்தையும், நிதியையும் எங்களுக்கு அனுப்ப முடியும். இதனால் எங்களால் எங்கள் கட்டமைப்பை நவீனப்படுத்த முடியும்," என்று பிபிசி நியூசிடம் அவர் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 ஆயிரம் தர வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!