சீனாவை சேர்ந்த இளம் பெண், தன்னுடைய தாயின் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடி, வெறும் 700 ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த இளம் பெண், இந்திய மதிப்பில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை தனது தாயிடம் இருந்து திருடி, திருட்டுத்தனமாக விற்பனை செய்துள்ளார். இது குறித்து அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணையில் அவரது மகள்தான் நகைகளை திருடிய தெரியவந்தது.
அவரிடம் மேலும் விசாரணை செய்தபோது, தனக்கு லிப்ஸ்டிக் வாங்க பணம் இல்லை என்பதால், வீட்டில் இருந்த நகைகளை கவரிங் என நினைத்து, அவற்றை வெறும் 700 ரூபாய்க்கு விற்று லிப்ஸ்டிக் வாங்கியதாகவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து, அவர் விற்பனை செய்த கடைக்குச் சென்ற காவல்துறையினர், நகைகளை மீட்டு அந்த இளம் பெண்ணின் தாயிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நகைகளை வாங்கிய நகை கடைக்காரரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.