வடகொரியாவின் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உயர் அதிகாரிகள் பல கோரமான கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர். அதில் சிலவற்றை பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
சில ஆண்டுகள் வடகொரிய முகாமில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் சில செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாய் உள்ளது. அவர் கூறிய சில செய்திகள் பின்வருமாறு....
ஒரு முறை முகாம்களில் இருந்து இருவர் தப்பிச்சென்றனர், இதனால், அவர்களது குடும்பத்தில் இருந்து 7 பேரை கொடூரமாக கொல்லப்பட்டனர். அதோடு இல்லாமல், இந்த இருவரையும் தேடி கண்டுபிடித்து அனைவரின் மத்தியில் தலை துண்டிக்கப்பட்டது.
பெண்களும் மிக மோசமான முறையில் நடத்தப்படுவர். பெண்களை கட்டாயப்படுத்தி கற்பழிப்பர். கற்பழிக்கப்பட்ட பெண்கள் கற்பமானால் அதை கலைத்துவிட வேண்டும். அதையும் மீறி குழந்தை பிறந்தால் குழந்தையை உயிரோடு எரித்துவிடுவர்.
அங்கு பணியுரியும் உயர் அதிகாரிகள் முன் பெண்கள் நிர்வாண அணிவகுப்பு நடத்த வேண்டும். முகாமில் 16 மணி நேரம் உழைக்க வேண்டும். சோளமும் உப்பும் மட்டுமே உணவாக வழங்கப்படும்.
கண்மூடித்தனமான தாக்குதல், இருட்டு அறை தண்டனை ஆகிய அனைத்தும் மக்களுக்கு வழங்கப்படும். முகாம்கலில் நடக்கும் கொடுமைகள் கிம் ஆட்சிக்கு வந்ததும் அதிகமானது எனவும் அந்த பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.