Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் எது தெரியுமா?

2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் எது தெரியுமா?
, புதன், 20 டிசம்பர் 2017 (23:59 IST)
இண்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு பாஸ்வேர்டின் முக்கியத்துவம் நன்றாக தெரிந்திருக்கும். இமெயில் முதல் ஆன்லைன் வங்கி கணக்கு வரை பாஸ்வேர்ட் இல்லாமல் ஒருவர் இண்டர்நெட் உபயோகிக்கவே முடியாது. அதே நேரத்தில் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க யூகிக்க முடியாத கடினமான பாஸ்வேர்ட் உருவாக்குவது மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் எது என்பது குறித்து ஆய்வு நடத்திய தனியார் நிறுவனம் ஒன்று அதன் முடிவுகளை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது. அதாவது 12134546 என்பதுதான் உலகிலேயெ மோசமான பாஸ்வேர்ட் என்றும் ஆனால் எளிமையாக இருக்கின்றது என்பதால் இதைத்தான் மிக அதிகமானோர் பயன்படுத்தியுள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளது

மேலும் 12345678 மற்றும் 12345 ஆகியவை உலகின் 2வது மற்றும் 3வது மோசமான பாஸ்வேர்ட் ஆகும். மேலும்  'qwerty', 'starwars', 'admin', 'welcome' மற்றும் 'login' ஆகிய பாஸ்வேர்ட்களும் மோசமான பாஸ்வேர்ட் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோதனை ஓட்டத்தில் சுவரை உடைத்து நின்ற மெட்ரோ ரயில்: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்