Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

24 ஆண்டுகள் உறைநிலையில் இருந்த கருவின் நிலை என்ன தெரியுமா??

Advertiesment
24 ஆண்டுகள் உறைநிலையில் இருந்த கருவின் நிலை என்ன தெரியுமா??
, புதன், 20 டிசம்பர் 2017 (18:39 IST)
24 ஆண்டுகளாக உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த கருவின் தற்போதயை நிலை அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டென்னசி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பெஞ்சமின் கிம்சன் - டினா கிப்சன்.
 
இவர்களுக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு எம்மா ரென் என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தை 6 பவுண்டுகள் எடையுடன் 20 இஞ்ச் நீளமுடன் இருந்துள்ளது. இந்த குழந்தையின் வரலாறு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆம், இந்த குழந்தை தற்போது பிரந்திருந்தாலும், இதன் கரு 24 ஆண்டுகளிக்கு முன்னரே உருவாகியுள்ளது. 24 ஆண்டு காலம் உறைநிலையிலேயே கரு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இது குறித்த அறிக்கை ஒன்ரை தேசிய கரு தான மையம் வெளியிட்டுள்ளது. 
 
அதில், கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இந்த கரு பாதுகாக்கப்பட்டு வந்தது. உறை நிலையிலான கரு இந்த வருட துவக்கத்தில் டினாவின் கரு குழாய்க்குள் செலுத்தப்பட்டது. இதனால் டினா பிறந்து 18 மாதங்களுக்கு பின்னர் உருவான கருவை அவர் சுமந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

750 ஜிபி 4ஜி டேட்டா; அட்வான்ஸ் 2018 ஆஃபர்: ஜியோ அதிரடி!!