Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜினாமா ஏன் ? ராகுல் காந்தி விரிவான அறிக்கை : காங்கிரஸில் பரபரப்பு

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (16:02 IST)
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜகவிடம் படு்தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாருமே தேர்தலில் கட்சித் தோல்விக்குப் பொறுப்பேற்காத  நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடித்தார். இதற்கு 5 மாநில முதல்வர்கள் நேரில் சென்று ராகுலை சமாதானப்படுத்த முயன்றனர். பலவேறு மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஆனால் எதற்கும் ராகுல் உடன்படவில்லை என்று தெரிகிறது. நேரு குடும்பத்தைச் சாராத ஒர்வரே காங்கிரஸ் தலைவராக பொறுபேற்க வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினார்.
 
இதுகுறித்து ராகுல் காந்தி இன்று கூறியிருந்ததாவது :
 
தலைவராக நீடிக்க மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறி ராகுல்காந்தி பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. காங்கிரஸ் காரியக் கமிட்டி குழு உடனே கூட்டப்பட்டு புதிய தலைவரை தேர்வு குழு உடனே கூட்டப்பட்டு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராகத் தொடர முடியாது அதனால் தாமதிக்காமல்   உடனே புதிய தலைவரைத் தேர்ந்தெடுங்கள் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் தனது  ராஜினாமா முடிவு ஏன் என்பது குறித்து ராகுல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
அதில், மக்களவைத் தேர்தலில் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். காங்கிரஸ் கட்சியை சீரமைக்கக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு பலரை பொறுப்பாக்க வேண்டியுள்ளது. கட்சியின் அடுத்த தலைவரை நான் தேர்வு செய்வது சரியாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
 
ராகுலின் இந்த முடிவால் மற்ற மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments