Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாமதிக்காமல் புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள் - ராகுல் காந்தி பிடிவாதம்

தாமதிக்காமல் புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள் - ராகுல் காந்தி  பிடிவாதம்
, புதன், 3 ஜூலை 2019 (15:35 IST)
தலைவராக நீடிக்க மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறி ராகுல்காந்தி பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. காங்கிரஸ் காரியக் கமிட்டி குழு உடனே கூட்டப்பட்டு புதிய தலைவரை தேர்வு குழு உடனே கூட்டப்பட்டு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜகவிடம் படு்தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாருமே தேர்தலில் கட்சித் தோல்விக்குப் பொறுப்பேற்காத  நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடித்தார். இதற்கு 5 மாநில முதல்வர்கள் நேரில் சென்று ராகுலை சமாதானப்படுத்த முயன்றனர். பலவேறு மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
 
ஆனால் எதற்கும் ராகுல் உடன்படவில்லை என்று தெரிகிறது. நேரு குடும்பத்தைச் சாராத ஒர்வரே காங்கிரஸ் தலைவராக பொறுபேற்க வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினார்.
 
இந்நிலையில் இன்று ராகுல் காந்தி கூறியுள்ளதாவது :
 
தலைவராக நீடிக்க மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறி ராகுல்காந்தி பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. காங்கிரஸ் காரியக் கமிட்டி குழு உடனே கூட்டப்பட்டு புதிய தலைவரை தேர்வு குழு உடனே கூட்டப்பட்டு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராகத் தொடர முடியாது அதனால் தாமதிக்காமல்   உடனே புதிய தலைவரைத் தேர்ந்தெடுங்கள் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளியில் மண்டியிட்டு வணங்கிய அமைச்சர் : வைரலாகும் போட்டோ