நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்கவுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கியின் கணவர், ஒரு விமானத்தை கடத்திய போராளி என்றும், அவர் கடத்திய விமானத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சுசீலா கார்க்கி நேபாள நீதித்துறையில் ஒரு துணிச்சலான நபராக அறியப்பட்டாலும், அவரது கணவரான துர்கா பிரசாத் சுபேதியின் கடந்த காலம் பரபரப்பானது. 1973-ல் நேபாளத்தின் ஒரு விமான கடத்தலில் சுபேதி ஈடுபட்டார்.
அவர் கடத்திய விமானத்தில் பிரபல பாலிவுட் நடிகை மாலா சின்ஹா உட்பட 19 பயணிகள் இருந்தனர். ஆனால், கடத்தலின் முக்கிய நோக்கம் நடிகை அல்ல என்பதும், வங்கிகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ₹30 லட்சம் பணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சுபேதி பின்னர் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் அதே நேரத்தில் சுசீலா கார்க்கி, தலைமை நீதிபதியாக பதவி வகித்த போது, பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கினார்.குறிப்பாக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜெயபிரகாஷ் குப்தாவை சிறைக்கு அனுப்பிய அவரது தீர்ப்பு நேபாள வரலாற்றிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது.