Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமா; 2017 ஒரு பார்வை - இந்திய திரைப்பட வரலாற்றில் பாகுபலி 2

சினிமா; 2017 ஒரு பார்வை - இந்திய திரைப்பட வரலாற்றில் பாகுபலி 2
, புதன், 20 டிசம்பர் 2017 (16:24 IST)
ராஜமெளலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில்  பாகுபலி 2 2017 ஏப்ரல் 28 தேதி வெளியாக உள்ளது. இதனை ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.
இந்நிலையில் பாகுபலி 2 ரிலீஸாவதில் சிக்கல் உருவானது. காவிரி விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் சத்யராஜ் பேசிய  பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் உள்ள கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் போராட்டம்  நடத்தினர். மேலும் பாகுபலி 2 ரிலீஸாகும் தேதியில் மாநிலம் தழுவிய பந்த நடத்தப்போவதாகவும் அறிவித்தார்.
webdunia
இதனால் சத்யராஜ் காவிரி விவகாரத்தில் 9 வருடங்கள் கழித்து  தனது பேச்சு கன்னட மக்களை பாதித்திருந்தால் அதற்கு  வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து சத்யராஜின் மன்னிப்பை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்தார். இதனால் இப்படம் வெளியாவதில்  ஏற்பட்டிருந்த சிக்கல் முடிவுக்கு வந்தது. இப்படி, பல  பிரச்னைகளைக் கடந்து ஏப்ரல் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸானது ‘பாகுபலி-2’.
 
இந்திய திரைப்பட வரலாற்றில் எந்தவொரு திரைப்படமும் இதுவரை ஏற்படுத்தாத எதிர்பார்ப்பை எஸ்.எஸ் ராஜமெளலியின் பாகுபலி 2 ஏற்படுத்தியது. அனுஷ்கா, ரம்யா, சத்யராஜ் ஆகியோரை கதாபாத்திரத்திற்கு ஏற்றவர்களாக கருதி தேர்வு செய்தனர்.  ஆனால் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரம் பிரபாஸுக்காகவே எழுதப்பட்டது என்றார் ராஜமவுலி.
webdunia
பாகுபலி 1 மற்றும் 2 இரண்டு பாகங்களின் மொத்த பட்ஜெட் தொகை 450 கோடி ரூபாய். முதல் பாகம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வெளியானது. இந்தியா முழுக்க சுமார் 6,500 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் சுமார் 9,000 திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்பட்டது. பாகுபாலி 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அந்த படம் சுமார்  500 கோடி ரூபாய் ஈட்டிவிட்டது.
 
உலகளவில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பாகுபலி 2 வசூல் சாதனை செய்தது. இந்தி, தமிழ், தெலுங்கு மட்டுமின்றி  ஆங்கிலம், ஜெர்மன், ஜப்பானிய, ஃபிரெஞ்சு மற்றும் சைனீஸ் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி, உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது பாகுபலி 2.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத் முதல்வராகிறாரா ஸ்மிருதி இரானி: ஆலோசனையில் பாஜக மேலிடம்!