Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரான்ஸ் பிரதமர் கன்னத்தில் அறைந்த மனைவி.. நாங்க சும்மா விளையாடினோம் என விளக்கம்..!

Advertiesment
மாக்ரோன்

Mahendran

, செவ்வாய், 27 மே 2025 (11:50 IST)
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் மற்றும் அவரது மனைவி தென்கிழக்காசிய பயணத்தின் போது, பிரதமரின் கன்னத்தில் அவருடைய மனைவி அறைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தற்போது விவாதமாகி வருகிறது. 
 
வியட்நாம் விமான நிலையத்தில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் மற்றும் அவரது மனைவி விமானத்தில் இருந்து வெளியேறும் தருணத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.
 
அந்த வீடியோவில் மாக்ரோன் முகத்தில் அவருடைய மனைவி ஒரு அறை கொடுத்ததுபோல் தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர்கள் விமானத்தின் உள்ளே இருக்கும் போது, கதவின் அருகே மாக்ரோன் நின்றபோது இந்த காட்சி பதிவாகியுள்ளது. அதிபர் அதற்கு எதிர்வினையில்லாமல் அமைதியாக இருப்பதும், பின்னர் வெளியே இருவரும் வருவதும் அந்த வீடியோவில் தெரிகிறது.
 
இது குறித்து விளக்கம் அளித்த அதிபர் மாக்ரோன், “நாங்கள் சில நேரங்களில் விளையாட்டுத்தனமான நடந்துகொள்வது வழக்கம். வெளியில் இருந்து அது வேறு மாதிரியான தோற்றத்தை தரலாம். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை,” என கூறினார்.
 
தொடக்கத்தில் இந்த வீடியோவை அதிபரின் அலுவலகம் மறுத்திருந்தாலும், பின் அது ஒரு சாதாரண வாக்குவாதமே என அறிவிக்கப்பட்டது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் கணவரை டிரைவர் என கூறுவதா? இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்த போலந்து பெண்..!