Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாதவிலக்கு விடுமுறை கேட்ட மாணவி.. உடையை அவிழ்த்து காட்ட சொன்ன ஊழியர்.. அதிர்ச்சி சம்பவம்..!

Advertiesment
மாணவர் உரிமைகள்

Siva

, செவ்வாய், 27 மே 2025 (07:53 IST)
சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மாதவிலக்கு காரணமாக விடுப்பு கேட்ட மாணவியிடம், “நீங்கள் உண்மையில் மாதவிலக்குக்கு உள்ளாகியுள்ளீர்களா என்பதை நிரூபிக்க உடைகளை கழற்றி காட்டுங்கள்” எனக் கேட்டதாக கூறப்படுகிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து அந்த மாணவி சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோவில், “மாதவிலக்குள்ள பெண்கள் அனைவரும் விடுப்பு பெற உடைகளை கழட்டி காட்ட வேண்டுமா?” என கேள்வி கேட்டேன். அதற்கு பதிலளித்த பெண் ஊழியர், “ஆம், இது என் விதி அல்ல; கழக விதிமுறையில்தான் உள்ளது” என பதிலளிக்கிறார். அதன்பின் மருத்துவமனை சான்றிதழ் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.
 
இந்த சம்பவம் பொதுமக்களின் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் விளக்கமளிக்கையில், “மாணவியின் உடல்நிலை குறித்து ஊழியர் கேட்டதும், அவரது ஒப்புதலுடன்  சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், சோதனையின்போது எந்த சாதனங்களும் பயன்படுத்தப்படவில்லை” என கூறியது.
 
மேலும் சில மாணவிகள் ஒரே மாதத்தில் மீண்டும் மீண்டும் மாதவிலக்கு காரணமாக விடுப்பு கேட்டதால் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது” எனவும் கூறியுள்ளது.
 
இதுகுறித்து சமூக ஊடகங்களில், “வயிற்றுப்போக்கு வந்தா, ஊழியர்  முன்னே கழிக்கணுமா?” போன்ற கருத்துகள் வைரலாக பரவி, பலர் மாணவியுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
சட்ட நிபுணர்கள், இது தனிப்பட்ட உரிமை மீறல் என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் இன்றிரவு 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!