6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

Siva
திங்கள், 9 ஜூன் 2025 (08:01 IST)
அமெரிக்கா அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று ஆறு மாதம் கூட முழுதாக ஆகவில்லை என்ற நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலையில் போராட்டத்தில் இறங்கியதால், அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், டிரம்பின் குடியுரிமை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக திடீரென கலவரம் பரவியது. சட்டவிரோதமாக தங்கி இருக்கும் நபர்களை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் மற்றும் பாலஸ்தீன் ஆதரவாளர்கள் இணைந்து நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததாகவும், இதனால் பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் பல தீக்கரையாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த போராட்டங்களை தீவிர இடதுசாரி செயல்பாடு என ட்ரம்ப் குற்றம் சாட்டி உள்ள நிலையில், இதனை பொறுத்துக் கொள்ள முடியாது என அறிவித்த அவர், 2000 தேசிய பாதுகாப்பு படைவினரை நிலைமையை சரி செய்ய அனுப்பியுள்ளதாகவும், கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
தற்போது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments