Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

Prasanth K
ஞாயிறு, 8 ஜூன் 2025 (18:59 IST)

இன்று மதுரை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.

 

இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்தார். அங்கு அதிமுகவினர், பாஜகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். சுவாமி தரிசனத்திற்கு பிறகு பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு அமித்ஷா பேசினார்.

 

அப்போது அவர் “தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு தமிழ் மொழியில் பேச முடியாததற்காக வருந்துகிறேன். ஜூன் 22ம் தேதி முருகன் மாநாட்டை இந்த மண்ணில் சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும். நான் டெல்லியில் இருந்தாலும் என் கண்ணும், காதும் தமிழ்நாட்டிலேயே உள்ளது.

 

2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும். திமுகவை தோற்கடிக்க அமித்ஷாவால் முடியாது என்று மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் தமிழக மக்களால் திமுகவை தோற்கடிக்க முடியும். அதற்காக அவர்கள் தயாராக உள்ளனர். திமுகவை வீட்டிற்கு அனுப்பும் மாற்றம் மதுரையில் தொடங்க உள்ளது” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மாநாட்டுக்கு வராதீங்க! - தவெக விஜய் வேண்டுகோள்!

3 நாட்களாக ஒரே விலையில் விற்பனையாகும் தங்கம் விலை.. மீண்டும் ஏறுமா? இறங்குமா?

3 வயது குழந்தையை தாம்பரம் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சென்ற மர்ம இளைஞர்.. அதிர்ச்சியில் போலீஸார்..!

சூரியனை விட்டு விலகும் பூமி! இன்று முதல் நமது உடலில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய புயல் சின்னம்.. கரையை கடப்பது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments