Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தார் எலான் மஸ்க்.. கட்சியின் பெயரும் அறிவிப்பு..!

Advertiesment
எலான் மாஸ்க்

Siva

, ஞாயிறு, 8 ஜூன் 2025 (08:19 IST)
பிரபல அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்க் விரைவில் புதிய கட்சி ஆரம்பிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் புதிய கட்சியை ஆரம்பித்து, அதன் பெயரையும் வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற எலான் மஸ்க் உதவிய நிலையில், தேர்தலுக்குப் பின்னரும் இருவரும் நெருக்கமாக இருந்தனர். எலான் மஸ்க் அவர்களுக்கு ஒரு துறையை ஏற்படுத்தி, அதன் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
 
ஆனால், திடீரென அதிபர் டிரம்ப் எடுத்த வரி குறித்த முடிவுகள் திருப்திகரமாக இல்லை என்பதையடுத்து, டிரம்ப்பை எலான் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனை அடுத்து, அவர் தனது பதவியில் இருந்து விலகினார்.
 
இந்த நிலையில், “அரசியல் கட்சி ஆரம்பித்தால் அமெரிக்க மக்கள் ஆதரவு கொடுப்பார்களா?” என்று அவர் கருத்துக்கணிப்பு எடுத்த நிலையில், 80 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனை அடுத்து, சமூக வலைதளத்தில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
 
அந்தக் கட்சிக்கு “தி அமெரிக்கன் பார்ட்டி” என்று பெயர் வைத்துள்ளார். இந்தக் கட்சி, டிரம்புக்கு எந்த அளவு சவாலாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!