ஓமைக்ரான் வைரஸ் அமெரிக்காவின் முதல் மரணத்தை ஏற்படுத்தி இருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் குறைவான பாதிப்பை உருவாக்கும் என்று கணிக்கப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் அமெரிக்காவின் முதல் மரணத்தை ஏற்படுத்தி இருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஆம், அமெரிக்கா நேற்றைய தினம், கோவிட்-19 ஒமிக்ரான் வேரியன்ட் பாதித்த முதல் மரணத்தைப் பதிவுசெய்தது, டெக்சாஸை சேர்ந்த அவர் தடுப்பூசி போடாதவர்.