உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ் அமெரிக்காவில் மிக வேகமாக பரவும் என ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து நாட்டு மக்களை எச்சரித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “தற்போது பரவியுள்ள ஒமிக்ரான் வைரஸ் வேகமாக அமெரிக்காவில் பரவக்கூடியது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இது மரணத்தை கூட விளைவிக்கலாம். எனவே மக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.