வெனிசுலாவில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி சென்ற ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில், படகில் இருந்த 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ராணுவ கப்பல்கள், வெனிசுலா நாட்டு கடற்படைக்கு சொந்தமான பகுதியில் நுழைந்து, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
படகில் இருந்தவர்கள் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் என்றும், இவர்கள் போதைப்பொருட்களை அமெரிக்காவிற்குள் கடத்த முயன்றதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், படகில் இருந்த மற்றவர்களை பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து வெனிசுலா அரசு இதுவரை எந்த அதிகாரபூர்வமான கருத்தையும் வெளியிடவில்லை. தென் அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க அமெரிக்கா தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சம்பவம், வெனிசுலா - அமெரிக்கா இடையேயான அரசியல் பதற்றங்களை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.