Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்; இறுதி ஊர்வலத்திலும் துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்; இறுதி ஊர்வலத்திலும் துப்பாக்கிச்சூடு!
, வெள்ளி, 3 ஜூன் 2022 (09:52 IST)
அமெரிக்காவில் கடந்த சில காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது இறுதி ஊர்வலம் ஒன்றிலும் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில தினங்கள் முன்னதாக டெக்ஸாசில் உள்ள பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 மாணவர்கள் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் துப்பாக்கி கலாச்சாரம் மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளது.

இந்நிலையில் இரண்டு நாட்கள் முன்னதாக அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். தற்போது விஸ்கான்சின் மாகாணத்தில் இறந்த ஒருவரை கல்லறை தோட்டத்தில் புதைக்க சென்றபோது அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது சரமாரி துப்பாக்கிசூட்டை நடத்தியுள்ளார்.

இதனால் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து நடைபெற்று வரும் இந்த துப்பாக்கிசூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 4 ஆயிரம் பேர் பாதிப்பு; அதிகரிக்க தொடங்கிட கொரோனா! – இந்திய நிலவரம்!