Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவமனை துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி - அமெரிக்கா செய்யப்போவது என்ன?

Advertiesment
மருத்துவமனை துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி - அமெரிக்கா செய்யப்போவது என்ன?
, வியாழன், 2 ஜூன் 2022 (09:44 IST)
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் பலி. 

 
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவம் உலக அளவில் துப்பாக்கி பயன்பாடு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும் துப்பாக்கிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். 
 
ஆம், அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணம் துல்சா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில்  மர்ம நபர் ஒருவர் 2 துப்பாக்கிகளை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் ந்த மர்ம நபர் தன்னை தானே சுட்டுக் கொன்று உயிரிழந்துவிட்டார். தாக்குதல் நடத்திய மர்ம நபர் சுமார் 40 வயதுடைய கருப்பினத்தவர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளன்ர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
webdunia
இது போன்ற துயர சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் தனிநபர் கைத்துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் பரிசீலித்து வருகின்றன. அதன்படி கனடாவில் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டம் அமலுக்கு வரும் போது, கைத்துப்பாக்கிகளை வாங்க, விற்க இறக்குமதி செய்ய முடியாது. விளையாட்டு மற்றும் வேட்டைக்கு மட்டும் கைத் துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4,000 நெருங்கும் தினசரி பாதிப்புகள் – இந்திய கொரோனா நிலவரம்!