உக்ரைன் தலைநகர் கீவ்-க்கு அருகே உள்ள புக்கா என்ற நகரத்தில் சாலையில் நூற்றுக்கணக்கான உடல்கள் சிதறிக்கிடந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 39 நாட்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவமும் ரஷ்ய வீரர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
இதனைத்தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ்-க்கு அருகே உள்ள புக்கா என்ற நகரத்தில் சாலையில் நூற்றுக்கணக்கான உடல்கள் சிதறிக்கிடந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புச்சா நகரிலுள்ள ஒரு தெருவில் கைகள் கட்டப்பட்ட நிலையில் 20 ஆண்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன.
இது ஒரு இனப்படுகொலை என்றும் இதை செய்தது ரஷ்யா தான் எனவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றஞ்சாட்டினார். பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தனிப்பட்ட விசாரணைக்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.