Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமான நிலையம் அருகே தாக்குதல்!.. துபாய், அபுதாபி விமான நிலையங்கள் மூடல்!..

Advertiesment
dubai
கடந்த மாதம் 28ம் தேதி முதலே ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என இஸ்ரேலும், அமெரிக்காவும் விரும்புகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போர் துவங்கியிருக்கிறது.

துபாய், சவுதி அரேபியா, அபுதாபி போன்ற வளைகுடா நாடுகளில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை நிறுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக ஈரான் வளைகுடா நாடுகளின் மீது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.. பல இடங்களில் எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

குறிப்பாக துபாய், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தொடர் தாக்குதல் நடக்கிறது.. துபாய் விமான நிலையம் அருகே ஏற்கனவே இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்றும் துபாய் விமான நிலையம் அருகே ஈரான் தாக்குதல் நடத்தியது.. இதை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருக்கிறது.

விமான போக்குவரத்துக்கான வான் பகுதியை மூடுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருக்கிறது.. டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் விமான நிறுவனத்தின் அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் தேதி அறிவிப்பு!.. கவிஞர் திருமலை சோமு எழுதிய வாக்காளர் விழிப்புணர்வு பாடல் வெளியீடு