தைவான் அருகே கடல்பகுதியில் உருவான சக்திவாய்ந்த ரகசா புயல் கரையை கடந்தபோது தைவான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
ரகசா புயல் கரையை கடந்தபோது வீசிய கடும் சூறாவளி காற்றில் கார்கள், வீடுகள் அடித்து வீசப்பட்டன. இந்த புயலால் 17 பேர் பலியாகியுள்ள நிலையில் 124 பேர் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் 10 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தைவான், பிலிப்பைன்ஸை தாக்கிய புயல் அங்கிருந்து கடந்து சென்று ஹாங்காங்கையும் தாக்கியது. இதில் படகுகள் நொறுங்கிய நிலையில், கட்டிடங்கள் சேதமடைந்தன. பல பகுதிகளிலும் வெள்ளம் கரைப்புரண்டு ஓடும் நிலையில், பல குடியிருப்பு பகுதிகளுக்கும் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஹாங்காங்கில் கடும் புயலால் கடல் ஆர்ப்பரித்து அலைகள் சுனாமி போல எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மூன்று நாடுகளிலும் மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் புயல் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K