ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா சென்றபோது, அவர்கள் பயன்படுத்திய எஸ்கலேட்டர் திடீரென நின்றுவிட்டது. இதனால் இருவரும் படிக்கட்டில் நடந்து மேலே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, பாதுகாப்பு அதிகாரிகளுடன் எஸ்கலேட்டரில் ஏறிச் சென்றபோது, அது திடீரென நின்றுவிடுகிறது. இதனால், அவர்கள் படிக்கட்டில் நடந்து சென்று, அங்கிருந்த லிஃப்டைப் பயன்படுத்தி மேலே சென்றனர்.
டிரம்ப் கடந்த காலத்தில், எஸ்கலேட்டர்கள் மற்றும் லிஃப்ட்களின் பயன்பாடு குறித்து அடிக்கடி கேலி செய்து பேசியுள்ளார். இந்த சம்பவம் அவருக்கு ஒரு சிறிய சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவி ஐக்கிய நாடுகள் சபைக்கு வந்தபோது இந்த எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்டாலும் இது சதி வேலையா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.