Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போறதுக்குள்ள ஒரு போரை கிளப்பி விடணும்!? – ட்ரம்ப்பின் மாஸ்டர் ப்ளான்??

போறதுக்குள்ள ஒரு போரை கிளப்பி விடணும்!? – ட்ரம்ப்பின் மாஸ்டர் ப்ளான்??
, செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:02 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த அதிபர் ட்ரம்ப் தனது பதவிக்கலாம் முடிவதற்குள் ஈரான் மீது தாக்குதல் நடத்த இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் அணு ஆயுத உற்பத்தையை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளின் சார்பாக ஒப்பந்தம் ஒன்று  கடந்த 2015ல் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி ஈரான் மீதான பொருளாதர தடைகள் திரும்ப பெறப்பட்டு ஈரான் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் ஈரானுடனான ஒப்பந்தத்தை திரும்ப பெற்று, மீண்டும் ஈரானுக்கு பொருளாதார தடைகள் விதித்தார்.

இதனால் ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே சிறிய அளவிலான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அதிபராக வர இருக்கும் ஜோ பிடன் “ட்ரம்ப் செய்த தவறுகளை நாங்கள் சரிசெய்வோம்” என கூறியுள்ளார். மேலும் ஜோ பிடன் ஈரான் மீதான பொருளாதார தடைகளை திரும்ப பெற்று புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈரானில் அமெரிக்காவின் விதிகளை மீறி யுரேனியம் கையிருப்பை அதிகப்படுத்துவதாக அமெரிக்க உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. நடப்பு அதிபர் ட்ரம்ப் இதுகுறித்து பாதுகாப்பு துறை அமைச்சர்கள், அதிகாரிகளோடு விவாதித்து ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ட்ரம்ப்பின் இந்த செயல் அடுத்து அதிபராகும் ஜோ பிடனுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாசன் ஐ கேர் அருண் மரணத்தில் சந்தேகம்: உறவினர்கள் புகார்!