2 ஆம் உலகப்போரின் போது வெடிக்காமல் கடலுக்கு அடியில் கிடந்து குண்டு தற்போது வெடிக்க வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
2 ஆம் உலகப்போரின் போது போடப்பட்ட குண்டு ஒன்று வெடிக்காமல் குவர்ன்சே கடல் பகுதியில் இருப்பதை கண்டு அதனை இங்கிலாந்து கப்பல் படையினர் கைப்பற்றினர். சுமார் 3 அடி நீளம் இருந்த அந்த குண்டு நீர்முழ்கி கப்பலை தாக்கும் திறணுடையது என கண்டறியப்பட்டது.
மேலும், இந்த குண்டு எப்போது வேண்டுமாணாலும் வெடிக்கலாம் என்ற நிலையில் இருந்ததால் அபாயத்தை தடுக்க தாமதிக்காமல் அந்த குண்டை கடலுக்கு அடியிலேயே வெடிக்கவைத்தனர்.