இந்தியா வளரும் நாடு கிடையாது: டிரம்ப் பாய்ச்சல்

வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (10:22 IST)
இந்தியாவை இனி வளரும் நாடு என கூறமுடியாது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா கடும் வரி விதித்து வருவதாக குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் பென்சில்வேனியாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், இந்தியாவும் சீனாவும் ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக திகழ்கின்றது. அவர்களை இனி வளரும் நாடுகள் என கூறமுடியாது என கூறியுள்ளார்.

மேலும், வளர்ந்து வரும் நாடுகள் என்ற வகையில் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெறுகின்றன. இது அமெரிக்காவிற்கு பெரும் பாதகமாக அமைகிறது” எனவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கமல் கட்சியில் அதிரடி மாற்றம் – தேர்தலுக்கான வியூகமா ?