அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்ற நாடுகளை மிரட்டியே தன் கைக்குள் அனைத்து அதிகாரத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார் போலும். அந்த வகையில் அடுத்தொரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசை சேர்ந்த 1,600 பேர் கவுதமாலா வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய எல்லையில் காத்திருக்கின்றனர் எனற தகவல் டிர்ம்ப்பிற்கு கிடைத்துள்ளது.
இதனால், உடனே ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு பின்வருமாறு, அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைபவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படுவார்கள்.
மேலும், ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாட்டு அரசுகள், தங்கள் நாடுகளின் எல்லை வழியாக யாரையாவது அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதித்தால், அந்த நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவி நிறுத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.