Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்கா எதிர்ப்பார்க்கும் ஆட்சி மாற்றம்? ஈரான் கூறுவது என்ன?

Advertiesment
அமெரிக்கா எதிர்ப்பார்க்கும் ஆட்சி மாற்றம்? ஈரான் கூறுவது என்ன?
, செவ்வாய், 16 அக்டோபர் 2018 (19:13 IST)
அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. மேலும், ஈரானை தனிமைப்படுத்த, அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. 
 
இந்நிலையில், அமெரிக்காவின் நிலைபாடு குறித்தும் தங்களது நிலை குறித்தும், ஈரான் நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி அர்சு தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டது பின்வருமாறு, 
 
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஈரானுடன் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத விரோதத்தை கடைப்பிடிக்கிறது. ஒருவர் மட்டும் எதிரியாக இருந்து கொண்டு மிதமுள்ளவர்கள் அவரை வழி நடத்திய காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது மோசமான நிலையாக அனைவரும் இணைந்து கொண்டுள்ளனர்.
 
அமெரிக்காவால் ஈரான் ஏற்றுமதியை பூஜ்ஜியமாக்க முடியாது. ஈரானில் ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்ப்பார்க்கிறது. என்னத்தான் எண்ணெய் தேவையை ஈரானுக்கு பதில் சவுதி ஈடுசெய்யும் என்று அமெரிக்கா கருதினாலும், ஈரானின் எண்ணெய் வியாபாரம் தற்போது 80 டாலைரை எட்டியுள்ளது. 
 
ஏற்றுமதியஒ பொருத்த வரை ஈரான் முன்னர் எந்த அளவு வருமானம் ஈட்டியதோ அதே அளவு வருமானத்தைதான் தற்போதும் ஈட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவை எதிர்த்து பல நாடுகள் ஈரானுடன் வரத்தகத்தை தொடர முடிவு செய்துள்ள நிலையில், ஈரான் அதிபரின் இந்த பேச்சு அமெரிக்காவை சீண்டுவது போல் உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஜானாவை காலி செய்த பேர் வழி: கமலை நாரடித்த நமது அம்மா நாளிதழ்