நான் அமெரிக்க அதிபர் ஆனால், இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்துவேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் திடீரென வைரல் ஆகி வருகிறது.
டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று உள்ள நிலையில், அமெரிக்காவின் 47வது அதிபராக இன்னும் ஓரிரு நாளில் அவர் பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில், "இஸ்ரேல் பாலஸ்தீன போரை எப்படி நிறுத்துவது என்று எனக்கு தெரியும். நான் கண்டிப்பாக அதிபர் ஆனால், போரை நிறுத்துவேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஆனவுடன், அவர் இஸ்ரேல் பாலஸ்தீன போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் திடீரென சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அனேகமாக, அதிபர் பொறுப்பேற்றவுடன், அவர் முதல் வேலையாக போரை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.