Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனது வெற்றிக்கு எலான் மஸ்க் ஒரு முக்கிய காரணம்: டிரம்ப் புகழாரம்..!

Advertiesment
எனது வெற்றிக்கு எலான் மஸ்க் ஒரு முக்கிய காரணம்: டிரம்ப் புகழாரம்..!

Siva

, புதன், 6 நவம்பர் 2024 (15:29 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், "எனது வெற்றிக்கு எலான் மஸ்க் ஒரு முக்கிய காரணம்" என்று தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் ஒரு அற்புதமான மனிதர்; நமக்காக அமெரிக்காவின் பல இடங்களில் பிரச்சாரம் செய்தார்; இன்று அவர் ஒரு மிகப்பெரிய ஸ்டாராக உருவெடுத்திருக்கிறார்," என்றும் குறிப்பாக பென்சில்வேனியாவில் அவர் இரண்டு வாரங்கள் முழுமையாக தங்கி நமக்காக பிரச்சாரம் செய்தார் என்றும் டிரப் தெரிவித்தார்.

"இந்த மிகப்பெரிய வெற்றிக்கு அவருடைய பங்கு முக்கியமானது; அதனால் தான் அவரை நான் பெரிதும் மதித்து நேசிக்கிறேன். லவ் யூ எலான் மாஸ்க்," என்றும் கூறினார்.

மேலும், "இதுவரை யாரும் கண்டிராத இயக்கம் இது; வெளிப்படையாக சொன்னால், இது மிகப்பெரிய அரசியல் இயக்கம் என்று நான் நம்புகிறேன். நம் நாட்டை சரிப்படுத்த நாங்கள் முயற்சி செய்யப் போகிறோம்; நமது எல்லைகளை சரி செய்யப் போகிறோம்; அமெரிக்கர்களுக்காக புதிய வரலாறு படைக்கப் போகிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும்: நடிகை ரோஜா!