Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாலையோர குடிசைப் பகுதியில் லாரி மோதி விபத்து...7 பேர் பலி

Accident
, சனி, 22 ஏப்ரல் 2023 (21:21 IST)
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் துன்யாபூர் நககரியோல் லாரி விபத்தில் சிக்கியது. இதில் 7 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் நாட்டில்  பிரதமர் ஷபாஷ்  ஷெரீப் தலைமையிலான  ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள பஞ்சாப் மாகாணத்தின் லோத்ரன் மாவட்டம் துன்யாபூர் நகரில் இன்று ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது.

அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து  ஓடி, அப்பகுதியில் சாலையோரம் உள்ள குடிசைகள் மீது பாய்ந்தது.

இந்தக் குடிசைகள் வசித்தவர்களில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்ள்ளிட்ட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்ப்பிவைத்தனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம்  வழங்குவதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக் கோப்பை வில்வித்தை போட்டி: இந்திய வீராங்கனை சுரேகா வெண்ணாம் தங்கப்பதக்கம்