Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்கள் ரகசியங்கள் என் கையில்… சீனியர் வீரர்களை மிரட்டும் உம்ரான் அக்மல்!

Advertiesment
உங்கள் ரகசியங்கள் என் கையில்… சீனியர் வீரர்களை மிரட்டும் உம்ரான் அக்மல்!
, வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (14:55 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான உமர் அக்மல் அவர் மீதான் கிரிக்கெட் சூதாட்டத்துக்காக 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியை சேர்ந்த உமர் அக்மல் தனது பேட்டிங் திறமைகளுக்காக பேசப்படுவது போலவே சர்ச்சைகளுக்காகவும் பேசப்படுவர். கடந்த சில ஆண்டுகளாக அணியில் இடம் இல்லாமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் அவர் ஏற்கனவே பயிற்சியாளரிடம் சண்டை போட்டு சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது நெருங்கிய உறவினரும், தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் அசாம் அளித்த ஒரு நேர்காணலில், ‘தன்னுடைய ஆரம்ப காலத்தில் அக்மல் சகோதரர்கள் உதவி செய்யவில்லை என்பதை பெயர்க் குறிப்பிடாமல் கூறியிருந்தார்’. அதற்கு இப்போது கோபமாக பதிலளித்துள்ள அக்மல் “நான் அவர்களோடு பல போட்டிகளை விளையாடியுள்ளேன். அவர்களை ரகசியங்களை நான்றிவேன். அதனால் அவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான் நல்லது’ என எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுபவத்தை பணத்தால் வாங்க முடியாது… ஷேவாக் காட்டமான விமர்சனம்!