Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2017 டிரெண்டிங்: டிவிட்டரை கலக்கிய ஹேஷ்டேக்குகள்!!

Advertiesment
2017 டிரெண்டிங்: டிவிட்டரை கலக்கிய ஹேஷ்டேக்குகள்!!
, வியாழன், 28 டிசம்பர் 2017 (16:12 IST)
2017 ஆம் ஆண்டின் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த ஆண்டு முழுவது உலக அளவில் அரங்கேறிய முக்கிய சம்பவங்களில் டிவிட்டரில் டிரெண்ட்டாகிய சில ஹேஷ்டேக்குகள்...
 
#MeToo
ஆண்களும் பெண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் தொல்லைகளுக்கும் உள்ளான தங்களது கதைகளை பகிர்ந்துகொள்ள இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தினர். 
இந்த ஹேஷ்கேக் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் அறுபது லட்சம் முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டது.
 
#TakeAKnee
#TakeAKnee எனும் ஹேஷ்டேக் வெறும் மூன்று நாட்களில் 12 லட்சம் டிவிட்டுக்களில் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் நடக்கும் தேசிய கால்பந்து லீக் போட்டி வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை விவரிக்கும் வகையில் இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது.
 
#Covfefe
COVFEFE எனும் வார்த்தைக்கான அர்த்தம் குறித்து சமூக ஊடக பயனாளர்கள் மத்தியில் வாதங்கள் எழுந்தது. இந்த வார்த்தையானது முதலில் அதிபர் டிரம்பின் ட்விட்டில் இடம்பெற்றது.  இந்த ட்விட் இரண்டு மணிநேரத்தில் கிட்டத்தட்ட 70,000 தடவை ரீட்விட் செய்யப்பட்டிருந்தது. இறுதியாக 14 லட்சம் தடவை #Covfefe என்ற வார்த்தை ட்விட்டரில் பயன்படுத்தப்பட்டது.
 
#Third_debate
மே மாதம் இரானில் அதிபர் தேர்தல் நடந்தது. ஆறு வேட்பாளர்களிடையே மூன்று தொலைக்காட்சி ஜனாதிபதி விவாதங்கள் நடைபெற்றது. அப்போது #Third_debate எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது. அன்றைய நாள் முடிவில் 1.5 லட்சம் தடவை இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டிருந்தது. 
 
#YemenInquiryNow
ஏமன் அல்-மசிரா தொலைக்காட்சியானது டிவிட்டரில் #YemenInquiryNow எனும் ஹேஷ்டேக்கை பயன்படுத்த வலியுறுத்தியது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தும்படி அந்த தொலைக்காட்சி வலியுறுத்தியது. 24 மணி நேரத்தில் டிவிட்டர் பயனர்களால் 1.2 லட்சம் தடவை இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது. 
 
#ILoveYouChina
சீனாவின் தேசிய மக்கள் மாநாடு நடந்தபோது அரசு சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்தது. அப்போது, ஐ லவ் யூ சீனா என்னும் தீம் இசை வெளியானது. சீனாவின் சமூக வலைதளமான சினா வெய்போவில் இந்த காணொளி பதிவேற்றப்பட்டதும் 3.22 லட்சம் பகிர்வுகள், 35 ஆயிரம் கமென்ட் கிடைத்தன. அடுத்த இரண்டு வாரங்களில் #ILoveYouChina இரண்டு மில்லியன் தடவைக்கு மேல் பயன்படுத்தப்பட்டது.
 
#308Removed
ஜோர்டானிய சமூக ஊடக பயனாளர்கள் சர்ச்சைக்குரிய விதியை சட்டத்தில் இருந்து நீக்கியதற்காக அரசை பாராட்டி இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தினர். 
 
#ItsABlackThing
பிரேசிலில் உள்ள ட்விட்டர் பயனாளர்கள், நன்கு அறியப்பட்ட ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் அருகிலுள்ள ஒரு காரில் இருந்து வரும் அதீத சத்தங்களுக்கு பதிலாக அது கறுப்பர்கள் செய்யும் விஷயம் (ÉCoisaDePreto) என போர்ச்சுகீசிய மொழியில் சொல்லும் காணொளிக்கு எதிர்வினையாற்றினர். இந்த காணொளி வைரலாக பரவியது. 1.45 லட்சம் சமூக வலைதள பயனாளர்கள் #ÉCoisaDePreto எனும் ஹேஷ்டேகை பயன்படுத்தினர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக தலைமைக்கு மாதம் ரூ.1000 கோடி ஃபார்ட்டி பண்ட் : அதிர்ச்சி தகவல்