2017 ஆம் ஆண்டின் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த ஆண்டு முழுவது உலக அளவில் அரங்கேறிய முக்கிய சம்பவங்களை காண்போம்.....
வட கொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோத்னைகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்க அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதனால் போர் பதற்றம் நிலவியது.
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க பல பொருளாதார தடைகளை விதித்தது. இதனை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஆணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டது. இரு நாட்டு அதிபர்களுக்கு மத்தியில் வார்த்தை போரும் அரங்கேறியது.
தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்கா ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவியது.
கடந்த வாரமும் வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் செயல்கள் அனைத்திற்கு ஐநா ஒருமனதாக சம்மதித்து வருகிறது. அடுத்த ஆண்டேனும் இந்த போர் பதற்றம் தணியுமா?