Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக தலைமைக்கு மாதம் ரூ.1000 கோடி ஃபார்ட்டி பண்ட் : அதிர்ச்சி தகவல்

Advertiesment
ADMK
, வியாழன், 28 டிசம்பர் 2017 (16:11 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மாதம் ஆயிரம் கோடி கப்பம் கட்டுகிறது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க.தமிழ்ச்செல்வன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை, சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
அதன் தொடர்ச்சியாக, தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், சி.ஆர்.சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தினகரனின் ஆதரவு நிர்வாகிகளை எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு அதிரடியாக நீக்கியது. 
 
இந்நிலையில், தனியார் வார இதழுக்கு பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன் “குஜராத் தேர்தல் நடைபெற்ற போது அதற்கான செலவுக்காக ரூ.1000 கோடியை எடப்பாடியும், பன்னீர் செல்வமும் பாஜக தலைமைக்கு கொடுத்தனர். அதேபோல், ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் ஓவ்வொரு மாதமும் ரூ.1000 கோடியை எடப்பாடி அரசு பாஜக தலைமைக்கு கொடுத்து வருகிறது. இவர்கள் செய்யும் ஊழலில் பாதி பணம் அவர்களுக்கு செல்கிறது. அதனால்தான், இவர்களுக்கு இணக்கமாக மோடி அரசு நடந்து கொள்கிறது” எனப் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெற்றோர்கள் சம்மதிக்காததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்