வாரத்தில் நான்கு நாட்கள் மற்றும் வேலை நாட்கள் என்றும் மூன்று நாட்கள் விடுமுறை நாட்கள் என்று விரைவில் அறிவிக்க இருப்பதாக பெல்ஜியம் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் நான்கு நாள் வேலைத்திட்டத்தை ஸ்காட்லாந்து, ஸ்பெயின், ஐஸ்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அறிவித்திருந்தன
இதனையடுத்து பெல்ஜியம் நாட்டிலும் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற திட்டத்திற்கு அமைச்சரவை குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த திட்டம் பெல்ஜிய நாட்டில் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது
குடும்பத்திற்கும் வேலைக்கும் சமமான நேரத்தை ஒதுக்க மக்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக வாரத்தில் நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் விடுமுறை என்ற திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்