Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பையில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை: பொதுமக்கள் நிம்மதி!

மும்பையில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை: பொதுமக்கள் நிம்மதி!
, வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:33 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் இந்தியாவிலேயே மிக அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இந்த நிலையில் இன்று மும்பையில் கொரோனாவால் ஒருவர் கூட உயிர் இழப்பு இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
 
மும்பையில் இன்று கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 259 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1945 என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது
 
மும்பை மாநகராட்சி அடுத்தடுத்து எடுத்து வரும் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகள் மூலமும் கொரோனா வைரஸ் தடுப்பூசி விறுவிறுப்பாக செலுத்தப்பட்டதுமே மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததற்கு காரணம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?