Publish Date: Wed, 16 Feb 2022 (13:03 IST)
Updated Date: Wed, 16 Feb 2022 (13:23 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 19 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுகிறது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் காரணமாக 17 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும். பிப்ரவரி 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் 19 ஆம் தேதி ஓட்டுப்பதிவு முடியும் வரை மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கும் 22 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.