Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் கொடூரம்....பூங்காவை எரித்த தாலிபான்கள்....

மீண்டும் கொடூரம்....பூங்காவை எரித்த  தாலிபான்கள்....
, புதன், 18 ஆகஸ்ட் 2021 (18:54 IST)
ஆப்கானிஸ்தானின் பிரபல பூங்காவை தாலிபான்கள் எரித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அந்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர் உடனடியாக வெளியேறி வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள், அமெரிக்கர்கள் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபரின் மாளிகையைப் பிடித்த தலிபான்கள் அங்கு ஆட்டம் போட்டனர், அதேபோல் குழந்தைகளைபோல் சிறுவகை கார்களை போட்டு கையில் துப்பாக்கியுடன் வீடியோ வெளியிட்டு இன்று உலகையே அதிர வைத்தனர்.

ஏற்னவே சீனா, பாகிஸ்தான் நாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், தலிபான்களின் பழமைவாதம் பற்றிய பேச்சுகள் உலகம் முழுவதும் எதிரொளிக்கிறது.

இந்நிலையில் அஷ்ராப் கானி ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் ஓமன் நாட்டிற்குத் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியானது.

உலகமே ஆப்கானிஸ்தானை உற்றுநோக்கியுள்ள நிலையில், தற்போது அந்நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சாலே தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அதிபர் நாட்டை விட்டு ஓடிவிட்டதால், சட்டப்பூர்வமான நானே அதிபர் என அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,காபூலைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் உள்ள தாலிபான்கள் நேற்று விளையாட்டுப் பூங்காவில்  துப்பாக்கியுடன் விளையாடினர்.  

இன்று, நேற்று விளையாடி மகிழ்ந்த பூங்காவை அவர்களை தீ வைத்து எரித்துச் சாம்பலாக்கினர். இதுகுறித்து வீடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும், இஸ்லாமியர்களுக்கு எதிரான சிலைகள் பூங்காவில் இருந்ததால் இதை எரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.  
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்னர் தமிழிசையின் தாயார் மரணம்- கமல் இரங்கல்