Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜப்பானில் பாலியல் அடிமைப் பெண்களின் எண்ணிக்கை 4 லட்சமாம்...ஆய்வில் தகவல்

Advertiesment
ஜப்பானில் பாலியல் அடிமைப் பெண்களின் எண்ணிக்கை 4 லட்சமாம்...ஆய்வில் தகவல்
, திங்கள், 28 ஜனவரி 2019 (15:38 IST)
2 ஆம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கும் போது உலகத்தின் கடைசி போர் இதுவாகத்தான் இருக்கும் என்பது போன்ற அழிவுகள் நடந்தன. உயிர்களின் பழி எண்னிக்கையும் அதிக அளவில்  இருந்தது. அந்த காலகட்டத்தில் ஜப்பான் ராணுவமானது ஆசிய நாடுகளைச்சேர்ந்த பலலட்சம் பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தி வந்ததாக தகவல் வெளியாகிறது.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் 1942 ஆம் ஆண்டு  ஒரு இளம் பெண் லீ என்பவர் பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஜப்பானிய ராணுவ வீரர்கள் அப்பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அப்பெண்ணை வடகிழக்கு சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்குதான் அப்பென் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்திருக்கிறார்.
 
அதே போல பல லட்சம் பெண்கள் இரண்டாம் உலகப் போர் நடக்கும் காலகட்டத்தில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 4 லட்சம் என்று ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றன. இந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குக்கர் சின்னத்தை பார்த்து எடப்பாடியும், ஓபிஎஸ்ம் பயப்படுறாங்க: தங்க தமிழ்ச்செல்வன்