Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குக்கர் சின்னத்தை பார்த்து எடப்பாடியும், ஓபிஎஸ்ம் பயப்படுறாங்க: தங்க தமிழ்ச்செல்வன்

குக்கர் சின்னத்தை பார்த்து எடப்பாடியும், ஓபிஎஸ்ம் பயப்படுறாங்க: தங்க தமிழ்ச்செல்வன்
, திங்கள், 28 ஜனவரி 2019 (15:08 IST)
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய, நகர அ.ம.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.


 
இந்த விழாவில் கலந்து கொண்ட அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில்,
 
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அங்குதான் இருந்தார்கள். அப்போது எந்த கருத்தும் சொல்லாமல் இப்போது ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை கமி‌ஷன் அமைச்சிருங்காங்க. அதுவும் இன்னும் நிறைவு பெறவில்லை.
 
திருவாரூர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா பாணியில் நாங்கள் யாரையும் எதிர் பார்க்காமல் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டோம். ஆனால் கஜா புயலை காரணம் காட்டி தேர்தலை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நிறுத்திவிட்டார்கள்.
 
திருவாரூரில் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டது என்பதால் அதனை எதிர்கொள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினருக்கு பயம் வந்து விட்டது.
 
தேர்தல் ஆணையத்தில் குக்கர் சின்னம் கேட்டு மனு அளித்திருந்தோம். ஆனால் அதனையும் தர மறுத்து விட்டனர். இரட்டை இலை சின்னத்தை வைத்துள்ளபோதும் குக்கர் சின்னத்தை பார்த்து எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் பயப்படுவது ஏன்? வருகிற பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. மகத்தான வெற்றியை பெற்று நிரந்தரமான ஒரு சின்னத்தை பெறுவோம். என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு துணை ராணுவத்தில் 429 பணியிடங்கள்!